தலைநகரில் தமிழ் மணம்.. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டம்.. கரகாட்டத்துடன் களைகட்டிய விழா!
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஜனவரி 14 முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் பொங்கல் விழாவைத் தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடந்த சில வாரங்களாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாடாய்ப்படுத்தி வரும் மர்மக் காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்சா, ஆர்.எஸ்.வி மற்றும் அடினோ ஆகிய மூன்று முக்கிய வைரஸ்களே காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மழைக்காலம் முடிந்த பின்னரும் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருவதாலும், வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களாலும் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலியுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக உயர்ந்துள்ளது. சாதாரணக் காய்ச்சலாக இல்லாமல், இந்தத் தொற்று ஏற்பட்டால் குணமடைய நீண்ட நாட்கள் எடுப்பதுதான் மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழல் குறித்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறுகையில், சென்னையில் தற்போது இன்ஃப்ளூயன்சா (Influenza), ஆர்.எஸ்.வி மற்றும் அடினோ வைரஸ் (Adenovirus) ஆகிய மூன்று வைரஸ்கள் அதிகளவில் சுற்றிப் பரவுகின்றன; இவை முந்தைய காலங்களை விட தற்போது உருமாறி வலுவாகி வருவதே பாதிப்பு நீண்ட நாட்கள் நீடிக்கக் காரணமாகிறது" எனத் தெரிவித்தார். குறிப்பாக, நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றித் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்டு, சளி மற்றும் இருமல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்வதாக அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: விஜய் நடிகரா இருந்தா டெல்லிக்கு அழைத்திருப்போம்! பராசக்தி படக்குழு விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தற்போது மாநிலச் சுகாதாரத்துறையின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் சூழலால் பெரிய அளவில் உயிரிழப்பு ஆபத்து இல்லை என்றாலும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளை அணுகுவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முறையான சிகிச்சை எடுத்தால் மிகத் தீவிரமான வைரஸ்களையும் எளிதில் கட்டுப்படுத்தலாம் எனவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 28வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு..!! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!