விருதுநகர் வெடிவிபத்து கோரம்... சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி... மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்...!
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை தொழிலாளர்கள் தீயணைப்பு துறை மற்றும் காவலர் கள் உட்பட 21 பேர் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இது மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசாலையில் விடுமுறை தினமான நேற்று 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சரவெடி பின்னும் ஒரு அறையில் திடீரென உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. இந்த வெடி விபத்தில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பட்டாசு விபத்தில் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!
இந்த நிலையில் கட்டனார்பட்டி வெடி விபத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர் தமிழ்நாடு மின்சார வாரிய இணை இயக்குனர் கோவிந்த ராவ் ஐஏஎஸ் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிம் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு விபத்தில் காயம் அடைந்ததில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்
மேலும் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து 14 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் வருகை புரிந்து தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... நாளை மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரசாரம்...!