×
 

சசிகலா அதிரடி: ஆதரவாளர்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு? இரட்டை இலை சின்னத்தில் போட்டி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வை ஆதரிப்பதோடு, எனது ஆதரவாளர்களை இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைப்பேன் என வி.கே.சசிகலா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒதுங்கிப் போகும் ஆள் நான் இல்லை, வரும் சட்டமன்றத் தேர்தலை உறுதியாகச் சந்திப்பேன்" என இன்று காலை அதிரடியாக முழங்கிய வி.கே.சசிகலா, அதனைத் தொடர்ந்து தனது இல்லத்தில் நடத்திய ரகசிய ஆலோசனையில் தனது அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்து ஆதரவாளர்களிடம் பகிர்ந்துள்ளார். 

2026 தேர்தலில் அதிமுக-வை ஆதரிப்பதோடு, தனது ஆதரவாளர்களுக்குக் குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கி அவர்களை இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைக்க அவர் திட்டமிட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று முக்கிய ஆதரவாளர்களைத் தனித்தனியே அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தினார். அப்போது, "வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-விற்கு ஆதரவாக நான் தென் மாவட்டங்களில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்வேன். எனது தரப்பிற்கு 5 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கச் சொல்லிப் பெற்றுத் தருகிறேன். அந்தத் தொகுதிகளில் நீங்கள் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும். இப்போதே அந்தத் தொகுதிகளில் தேர்தல் வேலைகளைத் தொடங்குங்கள்" என்று ‘கறார்’ உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக விழுப்புரம், பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகளின் நிலவரம் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.

இதையும் படிங்க: பியூஷ் கோயல் - இபிஎஸ் சந்திப்பு எதிரொலி: சசிகலா ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

சசிகலாவின் இந்த அறிவிப்பால் அவரது ஆதரவாளர்கள் ஒருபுறம் உற்சாகமடைந்தாலும், மறுபுறம் பெரும் ‘குழப்பத்தில்’ ஆழ்ந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை இன்னும் சசிகலாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர் எப்படித் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவார்? அதிமுக நிர்வாகிகள் இதற்கு ஒத்துழைப்பு தருவார்களா? என்ற கேள்விகள் அவர்களுக்குள் எழுந்துள்ளன. இருப்பினும், முதல் முறையாகத் தேர்தல் களம் மற்றும் சின்னம் குறித்துச் சசிகலா இவ்வளவு உறுதியாகப் பேசியிருப்பது, திரைக்குப் பின்னால் ஏதோ ஒரு மர்மமாக நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.


 

இதையும் படிங்க: பியூஷ் கோயல் - இபிஎஸ் சந்திப்பு எதிரொலி: சசிகலா ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share