×
 

வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? - முழு விவரம் இதோ...!!

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் முறையை பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி காலை 8 மணிக்கு பாதுகாப்பாறையின் சீல் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறும். ஒரு தொகுதியில் மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு ஏற்கப்பட்டவை, நிராகரிக்கப்பட்டவை என தபால் வாக்குகள் இரு பிரிவுகளாக தரம் பிரிக்கப்படும். 

அதன் பின்னர் செல்லும் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். காலை 8:30 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவடையாத பட்சத்தில், ஒருபுறம் தபால் வாக்குகள் எனப்படும் மற்றொரு புறம் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னும் பணி தொடங்கும். சட்டமன்ற தொகுதிவாரியாக போடப்பட்டுள்ள மேசைகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குகள் எனப்படும். இதற்காக குறைந்தபட்சம் 14 மேசைகள் முதல் அதிகபட்சம் 24 மேசைகள் வரை போடப்படும். 

ஒரு மேசைக்கு ஒரு பார்வையாளர், ஒரு நுண் பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு கணினி பதிவாளர் என நான்கு பணியாளர்கள் இருப்பார்கள். மேசையில் வைக்கப்பட்டுள்ள இவிஎம் கட்டுப்பாட்டு கருவியின் சீல் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டு வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காண்பிக்கப்படும். முகவர்கள் தங்களிடம் உள்ள 17 சி படிவத்தோடு இதை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்வார்கள். இதனை தொடர்ந்து முடிவுகள் என்ற பொத்தானை அழுத்தினால் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரங்கள் தெரியவரும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அறிவிப்பு பலகையில் எழுதப்படும். இறுதியாக அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க: இரட்டை கொலை வழக்கில் கோட்டை விட்ட காவல்துறை... குற்றவாளி மீதான இரட்டை ஆயுள் தண்டனை குறித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!

இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... முக்கிய அதிகாரி செய்த பகீர் காரியங்கள்... ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share