வக்பு விவகாரம்... தவெகவின் சட்ட போராட்டத்திற்கான வெற்றி... மார்த்தட்டிய விஜய்!
வக்பு வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவின் இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் வக்பு சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது இருப்பினும் அந்த சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
வக்பு திருத்த சட்டம் முழுவதுக்கும் இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் இல்லை என்றும் அதில் சில பிரிவுகளுக்கு தங்கள் தடை விதித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். வக்ஃப் திருத்த சட்டம் 2025 மீதான உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் உத்தரவு, நீதி, அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மகத்தான வெற்றியை குறிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதி, சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கும் விதிகளை நிறுத்தி வைத்துள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: பெரம்பலூர் மக்களே மறுபடியும் வருவேன்... எனக்கு ரொம்ப வருத்தம்! - விஜய்
இந்த வெற்றியை அடைவதில் சிறந்த முயற்சிகள் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக தவெக சட்டக் குழுவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக விஜய் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எவ்ளோ ஆசையா இருந்தோம்? இப்படி பண்ணிட்டாங்களே! விரக்தியில் தவெக தொண்டர்கள்...