×
 

ஆபத்து...! ஆபத்து...!! - இன்று அந்த பக்கம் போகாதீங்க... வெளியானது அதிமுக்கிய எச்சரிக்கை...!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில்  காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தம் நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கும் வருவாய் இழப்பு 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் 100க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில்  காற்று வீசுவதோடு கடல் அலைகள் ஆக்ரோசத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனை அடுத்து ராமேஸ்வரம் பகுதியில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

இதையும் படிங்க: மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.20,000 ஆக உயருகிறதா?... கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த தவெக அரசு...!

இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகும், 100க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லாததால் மறைமுகமாகவும் நேரடியாகவும் 5000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை  சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பேட்டி. ஜஸ்டின் ராமேஸ்வரம் மீனவர் 

இதையும் படிங்க: “உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட...” - முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share