×
 

மேட்டூர் அணையில் நிகழ்ந்த திடீர் மாற்றம் - பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ளம்... மக்களுக்கு திடீர் எச்சரிக்கை...!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. 

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, உபரி நீர் காவிரி  ஆற்றில் திறந்து விடப்படுவதால், நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 1ம் தேதி முதல் இன்று வரையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 58 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. 

கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடாக அணைகள் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து இருந்தது. இதனால் கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் வரும் சுமார் 55 ஆயிரம் கன அடி நீர்  அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: ஆபத்து...! 7வது முறையாக மேட்டூர் அணையில் ஏற்பட்ட மாற்றம்... 13 மாவட்ட மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை...!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,500 கன அடியிலிருந்து 55,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், டெல்டா பாசனத்திற்கு 25,500 கன அடியாகவும், 16 கண் மதகு வழியாக 32,700 கன அடியாகவும் நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

பாசன கால்வாய் மற்றும் மேட்டூர் அணையின் 16 கண் மதகு மூலமும் வெளியேற்றப்படுவதால், நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மேடான பகுதிகளுக்கு தங்கள் உடைமைகளுடன் செல்ல குமாரபாளையம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஒளிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.  வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய மணிமேகலைத் தெரு, இந்திரா நகர், அண்ணா நகர் மற்றும் கலைமகள் வீதி, பொன்னியம்மாள் சந்து உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை செய்ததுடன் அவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
 

இதையும் படிங்க: #BREAKING உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share