×
 

நிரம்பும் அணைகள்... கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்... எச்சரிக்கை..!

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர் நிலைகள் மற்றும் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளை 76 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 136 ஏரிகள் 75 சதவீதமும், 108 ஏரிகள் 50 சதவீதமும், இரண்டு ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு 10வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கொடிவேரி அணைக்கு 3000 கன அடி நீர் திறக்கப்படும் நிலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 1221 கன அடியாக உயர்ந்துள்ளது. மொத்தம் 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21.28 அடியாக உள்ளதால் 750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடி நீர் இருப்பு 2929 மில்லியன் கன அடியாக உள்ளது. புழல் எரிக்கான நீர் வரத்து 556 கன அடியாக உள்ள நிலையில் உபரிநீர் 29 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. புழலேரியும் தற்போதைய நீர்மட்டம் 18.49 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 2707 மில்லியன் கன அடியாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியிலிருந்து 16,000 கன அடியாக குறைந்துள்ளது.

இதையும் படிங்க: மோன்தா புயல் சென்னையை நெருங்கியாச்சு... உஷார் மக்களே...! அடிச்சு நகர்த்தப்போகுது...!

இதே போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பியதால் நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ரோஷனை ஏரி நிரம்பி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

இதையும் படிங்க: மக்களே அலர்ட்... சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் காத்திருக்கும் ஆபத்து... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share