×
 

தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம்! தொடர்ந்து பாடுபடுவோம்! திருச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!

தமிழக வளர்ச்சிக்காக அயராது பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம் என திருச்சியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

திருச்சி: தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இன்று மாலை திருச்சி வந்தடைந்த அவர், தமிழர் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி-சட்டையில் அலங்கரித்து விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு பெற்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப்பூர் மைதானத்துக்கு சென்று, ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, “திருச்சிக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நிகழ்ச்சி தமிழகத்தின் எதிர்காலத்துக்கு மிக முக்கியமானது. ரூ.5,650 கோடி மதிப்பிலான திட்டங்கள் இணைப்பு திறனை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக திட்டத்தால் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 9 லட்சம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு பெறும். 

இதையும் படிங்க: வேஷ்டி, சட்டையுடன் திருச்சி விஜயம்!! உற்சாகம்!! ரூ.5650 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இத்திட்டம் 4 கோடி மரங்கள் நடுவதற்கு இணையான சுற்றுச்சூழல் பயனைத் தரும் என்று அவர் விளக்கினார்.

சென்னை மணலியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆலைகளில் ஒன்றான இது, மசகு எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தும். தமிழகத்துடன் மற்ற மாநிலங்களின் தொழிற்சாலை தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

மதுரையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று நாகர்கோவில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை இணைக்கும் 5 புதிய ரயில் சேவைகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இவை சுற்றுலா துறையை வளர்த்து, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்றார்.

“வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தமிழக மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது மத்திய அரசு. தமிழக வளர்ச்சிக்காக அயராது பாடுபடுகிறோம்... மேலும் தொடர்ந்து பாடுபடுவோம்” என்று உணர்ச்சிமயமாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமரின் உரை மற்றும் திட்டங்கள் மாநிலத்தின் எதிர்காலத்துக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: நாளை திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!! புதிய கட்டுப்பாடுகள் அமல்!! பாஜ தொண்டர்கள் உற்சாகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share