×
 

புத்தாண்டை வரவேற்ற மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்...!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய மழை நிலவரம் குறித்து பார்க்கும்போது, 2025-ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை சீசன் சற்று குறைவான மழையுடன் நிறைவடைந்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் தமிழகமும் புதுச்சேரியும் சேர்த்து சராசரியாக 44.2 செ.மீ. மழை பெய்ய வேண்டிய இடத்தில் 42.8 செ.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. இது சுமார் 3 சதவீதம் குறைவாகும். ஆனாலும், சில மாவட்டங்களில் அதிக மழை பெய்து சமநிலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் 95 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், விருதுநகர், திருவாரூர், தென்காசி போன்ற மாவட்டங்களும் அதிக மழையைப் பெற்றன. செங்கல்பட்டு போன்ற சில மாவட்டங்களில் குறைவான மழைதான் பெய்தது.பருவமழை அதிகாரப்பூர்வமாக டிசம்பர் இறுதியில் முடிவடைந்தாலும், ஜனவரி தொடக்க வாரங்களில் சில இடங்களில் மழை தொடர்வது வழக்கம். 2026-ஆம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கனத்த மழை பெய்து புத்தாண்டை வரவேற்றது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உஷார் மக்களே..! உதற போகுது... நீலகிரி, கொடைக்கானலுக்கு உறைபனி எச்சரிக்கை...!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே மழைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னையில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழை பொங்கல் பண்டிகைக்கு முன்பு விவசாயிகளுக்கு நல்ல பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரே ஒரு இடங்களில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று செல்சியஸ் இயல்பு விட குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரெண்டு நாளைக்கு மழை பிச்சு உதற போகுது... நெல்லை, தென்காசிக்கு மஞ்சள் அலர்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share