குடை எடுத்துட்டு போங்க மக்களே..! ஏழு மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் முல்லைத்தீவுக்கு அருகே நேற்று முன்தினம் மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலு குறைந்து தென்கடலுற தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்ச்சியாக நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்னும் சில இடங்களில் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்திருந்தது.
14 ஆம் தேதி முதல் ஓர் இரவு இடங்களிலும் 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆரஞ்சு அலர்ட்... அடிச்சு நகத்த போகுது மழை..! உஷார் மக்களே...!
கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காவிரி படுகை, பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப் போகுது... 12 மாவட்டங்களில் மழை... வானிலை மையம் அலர்ட்...!