×
 

23 மாவட்டங்களில் கனமழை... சென்னைக்கு "HIGH ALERT"..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்கின்ற தகவலையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

 தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, நெல்லை, குமரி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: குடை எடுத்தாச்சு... இன்று 20 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை...! வானிலை மையம் அறிவிப்பு...!

அது மட்டுமல்லாது, சென்னையில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டியில் 15 சென்டிமீட்டர் மழையும், நலுமுக்கில் 12, அரக்கோணத்தில் 10, மேடவாக்கத்தில் ஒன்பது சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. காக்கச்சியில் 8, புத்தன் அணையில் 7, திற்பரப்பில் 6, துரைப்பாக்கம் மாஞ்சோலை பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிரட்டப்போகுது மழை... உஷார் மக்களே... 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share