×
 

அடிச்சு நகர்த்த போகுது... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... சென்னையிலும் மழை...!

இன்றைய வானிலை நிலவரம் மற்றும் மழை எச்சரிக்கை குறித்து பார்க்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இடையில் ஒரு வார காலம் மழை சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மழை வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது. 

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நவம்பர் 16ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 17ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 18ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வானிலை அலர்ட்... கனமழை பெய்யுமாம்..! உஷார் மக்களே...!

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கட லோரம், அரபிக்கடல், வங்கக்கடலில் இன்று நாளையும் மணிக்கு 55 km வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னையில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடை எடுத்தாச்சு... 7 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது... உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share