சுழற்றி அடிக்கும் டிட்வா புயல்... ரெட் அலர்ட் வந்துருக்கு... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா...?
கனமழை எச்சரிக்கை தொடர்பான வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை பார்க்கலாம்.
டிட்வா புயல் காரணமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஐந்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புயல் வந்தாச்சு... ரெட் அலர்ட் ரெடி... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மைய இயக்குனர் அமுதா முக்கிய தகவல்...!
நாளை நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. புதுச்சேரியிலும் நாளை அதி கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்... வங்கக் கடலில் டிட்வா புயல் உருவானது... இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!