×
 
☰

புரட்டி எடுக்கப்போகும் மழை..! தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..! வானிலை அப்டேட்..!!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒன்பது மாவட்டங்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று இருபத்தொரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.நாளை ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இருபத்தேழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அடிச்சு நொறுக்கப் போகுது..! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! வானிலை அப்டேட்.!

இந்தப் பகுதிகளில் மழை அதிகரித்து, சில இடங்களில் வெள்ள அபாயமும் ஏற்படலாம்.நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட இருபத்தாறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடலோர மாவட்டங்களிலும் மழை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இன்று கோவை, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share