வெளுக்கப்போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...! முக்கிய அறிவிப்பு...!
ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இடையில் ஒரு வார காலம் மழை சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மழை வீரியம் எடுக்க தொடங்கியுள்ளது.
வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வானிலை அலர்ட்... கனமழை பெய்யுமாம்..! உஷார் மக்களே...!
மேலும், எட்டு மாவட்டங்களில் 17ஆம் தேதி கன பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 17ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும், தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் 17ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 18ஆம் தேதி கனமழை பெய்ததற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12 மாவட்ட மக்களே உஷார்..!! வெளுக்கப்போகுது மழை..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??