நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.... என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை சென்னை சாந்தோமில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள அந்த செயின் பீட்டர்ஸ் பள்ளி வளாகத்தில் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டும் என்றால் மக்களின் இல்லங்களை தேடி சுகாதார வசதிகளை கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை பொறுத்தவரையில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான உயர் மருத்துவ சேவைகளும் பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த நலன் காக்கும் ஸ்டாலின் திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொது மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர் சிகிச்சை மருத்துவங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும். அதேபோன்று மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பெண்களுக்கு தேவையான அந்த புற்றுநோய் தொடர்பான பரிசோதனை செய்யப்படும். அந்த பல்வேறு பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளையும் செய்யும் வகையில் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பொறுத்தவரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதிகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் கூடும் அதிகமாக கூடும் இடங்களில் இந்த முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமானது, இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல்.. முதலிடத்தில் நீடிக்கும் எலான் மஸ்க்.. தலைசுற்றும் சொத்து மதிப்பு!!
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என்று ஒவ்வொரு பகுதியிலும் தமிழ்நாடு முழுவதும் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமானது தொடங்கி நடைபெற உள்ளது. இந்த திட்டத்தில் வரும் பயனாளிகளுக்கு அனைத்து வகையான சோதனைகளும் செய்யப்பட்டு அவர்களுக்கு அடுத்த கட்டமாக மருத்துவ சிகிச்சை வேண்டுமென்றாலும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து அனைத்து சேவைகளும் வழங்கப்படும் வகையில் இந்த திட்டமானது வடிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம்கள் வீதம் மொத்தம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் சென்னை பெருநகர மாநகராட்சியில் 15 முகாம்களும, மீதமுள்ள மாநகராட்சியில் ஒரு மாநகராட்சிக்கு நான்கு முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ளது. ஐந்து மாநகராட்சிகள் 20 முகாம்களும் ஒரு மாநகராட்சிக்கு மூன்று முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள மாநகராட்சிகளில் 57 முகாம்கள் என்று மொத்தம் 1,256 முகாம்கள் இந்த முகாம்களில் நடத்தப்பட உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களானது மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசை பகுதிகளில் மற்றும் பழங்குடினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த முகாம்களானது நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களை பொறுத்தவரையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தை நல மருத்துவம், உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் வழங்கும் வண்ணம், இந்த முகாம் ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து... பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி...!