×
 

மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசு தன் கடமையை செய்துவிட்டது, மக்கள் நலன் காக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மக்கள் நலனைக் காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வினவியுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காகத் தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துவிட்டோம் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். டீக்கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன்களுக்கு ரூ.2 மின்சார மானியம், கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு போன்ற சலுகைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு இதுவரை என்ன உருப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதில் நிலவும் தாமதத்தை அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

இந்த மாத பொது விநியோகத் திட்டத்திற்காகத் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு முறையாக விநியோகிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காகக் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் விடுவிக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக எம்.பி.-க்கள் குழு டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான எரிவாயு நிலுவையை உடனே விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வெற்று அறிக்கைகளை விடுத்துத் தமிழக மக்களைத் திசைதிருப்பாமல், தேவையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதே மத்திய அரசின் இப்போதைய கடமை என முதல்வர் தனது பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விடுதலையாகும் சோனம் வாங்சுக்.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share