ரூ.2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை...? - எப்போது கிடைக்கும்? - முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு...!
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியாகும் தேதி குறித்து முதலமைச்சர் விஜய் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31. கோடி பயனாளிகளுக்கு கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.5,000 தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தலா ரூ. 1000 பணமும், ரூ. 2000 கோடைக்கால சிறப்புத் தொகையும் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது.
அதன்பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆன நிலையில், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வழங்கப்படுமா? அல்லது விஜய் அறிவித்தது போல் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், திட்டத்தை சீரமைக்க விஜய் கால அவகாசம் கோரியிருந்த விஜய், முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, வழக்கம் போல் மே 15ம் தேதி அன்று இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31. கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இது ஒரு வகையில் மகளிருக்கு ஆறுதலைக் கொடுத்தாலும் மற்றொரு வகையில் பெரும் அதிருப்தியாக மாறியது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி மாதம் ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க: முதல்வர் இருக்குற ஏரியாவுலேயே இப்படியா?... பிள்ளை குட்டிகளோடு நடுத்தெருவுக்கு வந்த மக்கள்... பரபரப்பான இசிஆர்...!
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியாகும் தேதி குறித்து முதலமைச்சர் விஜய் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் பட்ஜெட்டிற்கு முன்பாக தமிழகத்தின் தற்போதைய நிதிநிலையை விளக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிட முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் மகளிருக்கான ₹2500 உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை அறிக்கையின் மூலம் மாநிலத்தின் நிதிநிலையை விளக்குவதுடன், தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எவற்றை உடனடியாக நிறைவேற்ற முடியும், மீதமுள்ள திட்டங்கள் எவ்வளவு காலத்திற்குள் அமல்படுத்தப்படும் என்பதையும் முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்ட முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சரின் டெல்லி பயணத்திற்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
“பெரிய வெற்றி பெற்றுவிட்டோம் என்ற அலட்சியம் இல்லாமல், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் முழுமையான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “சமூக வலைத்தளங்கள் மற்றும் இளைஞர்கள் மூலமாக மட்டுமே வெற்றி பெற்றோம்” என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடிக்கும் வகையில், மக்கள் மத்தியில் கட்சியின் வலிமையை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும், அதற்கான சில முக்கிய வழிமுறைகளையும் விஜய் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணன் ராசாவுக்கு விசிக மேல என்ன கோவம்...?? - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த வன்னியரசு...!