நகராமல் நங்கூரமிட்ட‘டிட்வா’...!! சென்னையில் 2 நாட்களாக மழை வெளுத்து வாங்க இதுவே காரணம் - வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்...!
டிட்வா புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரைக்கு அருகே மையம் கொண்டிருக்கிறது.
நேற்று முதல் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக புரசைவாக்கத்தில் அதிகபட்சமாக 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையை மிரட்டும் டிட்வா:
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில அதிகபட்சமாக புரசைவாக்கத்தில 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக டிட்வா புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரைக்கு அருகே மையம் கொண்டிருக்கிறது. சுமார் 50 கிலோ மீட்டர் தொலையில் நேற்று காலை முதலே மையம் கொண்டிருப்பதால் சென்னையில் சில நேரங்களில் விட்டு விட்டு கனமழையும், பல நேரங்களில் மிதமான மழையும் தொடர்ந்து நீடித்து வருவதை பார்க்க முடிகிறது.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... பட்டப்பகலில் துணிகரம்... ஓடும் பேருந்தில் கடத்தி கொள்ளை...!
சென்னையில தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஐயப்பன்தாங்கலில் 16 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்துல 17 சென்டிமீட்டர் மழையும், அடையாறில் 12 சென்டிமீட்டர் வரைக்கும் மழையானது பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னை மாநகர் முழுவதுமே ஒரு 154 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரைக்கும் மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூரில் காலை 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நீடிக்க காரணங்கள் என்ன?
டிட்வா புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் 18 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு இஞ்ச் கூட நகராமல் மையம் கொண்டுள்ளதால், சென்னையில் எதிர்பாராத அளவிற்கு கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு வானிலை காரணிகளால் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த பிறகும் நீடிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலைகள் அல்லது புயல் சின்னத்தை பசுபிக் உயர் அழுத்தம் தான் வழி நடத்தும். அதாவது காற்றழுத்த நிலையோ, புயலோ எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும். தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் மேற்கத்திய தாழ்வு நிலை ஊருடுவல் காரணமாக ஒரே இடத்தில் நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஒருவரை இரண்டு பக்கமும் இழுப்பது போல், இரு வேறு வானிலை காரணிகளால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நிலைக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இமயமலையின் மேற்கத்திய தாழ்வு நிலை ஊடுருவல் மற்றும் பசுபிக் உயர் அழுத்தம் தான் தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் மையம் கொள்ள காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இனிமே பிரச்சனை இருக்காது... சென்னை பெரம்பூரில் அமையும் 4வது ரயில் முனையம்... திட்ட அறிக்கை கொடுத்தாச்சு...!