மனித மிருகம்… மனைவியை கொலை செய்து டிரம்மில் போட்டு புதைத்த கொடூர கணவன்…!
மனைவியை கொன்று ட்ரம்மில் வைத்து புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று டிரம்மில் போட்டு கணவன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏலாவூர் அருகே உள்ள துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெயிண்டர் சிலம்பரசன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி பிரியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட சிலம்பரசன் அவரிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், சிலம்பரசன் பிரியாவை அடிக்கடி அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் இணைந்து குடும்பம் நடத்தி வந்த சூழலில் கடந்த இரண்டு மாதமாக பிரியா தனது பெற்றோருடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் பிரியாவின் தந்தை ஸ்ரீனிவாசன் தனது மகளை பார்ப்பதற்காக துராபள்ளம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பிரியா எங்கேயோ சென்றுவிட்டார் என கூறி சிலம்பரசன் மழுப்பியதாக தெரிகிறது. தனது தாய் இரண்டு மாதமாக வீட்டில் இல்லை என்று குழந்தைகள் சொல்ல சந்தேகம் அடைந்த பிரியாவின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார்.
பிரியா மாயமானது குறித்து ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிலம்பரசனிடம் துருவித் துருவி போலீசார் விசாரித்தனர். அதில் பகீர் கிளப்பும் தகவல் கொடுத்துள்ளார் சிலம்பரசன். தனது மனைவி பிரியாவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாகவும் உடலை டிரம்மில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏழு கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டில் புதைத்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் அம்பலம்…!
தொடர்ந்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். தன்னந்தனியாக பிரியாவை கொன்றாரா அல்லது வேறு யாரேனும் சிலம்பரசனுக்கு உதவினார்களா என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது. பிரியா உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இன்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் முன்னிலையில் போலீசார் உடலை தோண்டி எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் அம்பலம்…!