×
 
☰

கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

தவெகவில் இருந்து விலகிவிட்டதாக பரவிவரும் தகவல்களுக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து தான் விலகிவிட்டதாகச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்களுக்குக் கடுமையான மறுப்பு தெரிவித்துள்ள அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தான் கண்ணை மூடுகிற வரை, கல்லறைக்குப் போகிற வரை தவெக-விற்காக மட்டுமே கடமையாற்றுவேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாஞ்சில் சம்பத், ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே போதும் என்று கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை வியந்தும் விதந்தும் பாராட்டியிருந்தார். ஆனால், அவர் ஆதவ் அர்ஜுனாவைக் குறைத்துப் பேசியதாகவும், இதனால் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தவெகவிலிருந்து அவர் விலகிவிட்டதாகவும் சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.

இந்த விவகாரம் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ள நாஞ்சில் சம்பத், அந்த ஆதவ் அர்ஜுனாவை நான் குறைத்துப் பேசியதாகச் சில குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம் என்று ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: அயோத்தியை ஆண்டது ராமனின் செருப்பு! தமிழகத்தை ஆள்வது? திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!

மேலும், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராகப் பணியாற்றி வரும் தான், தனது ஆயுள் உள்ளவரை, கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையைச் செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும், தன்னைக் களங்கப்படுத்த நினைக்கும் எந்தவொரு அவதூறு முயற்சியும் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது! தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! அரசியல் வட்டாரத்தில் விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share