×
 

FCRA சட்டத்திருத்தம்..! வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளை போன்றது... திமுக MP வில்சன் விளக்கம்..!!

எஃப் சி ஆர் ஏ சட்டத்திருத்தம் குறித்து திமுக எம்பி வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எஃப் சி ஆர் ஏ சட்ட திருத்தம் குறித்து விளக்கம் அளித்தார். வீட்டிற்கு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பது போன்றது எஃப் சி ஆர் ஏ சட்டத்திருத்தம் என்று தெரிவித்தார்.

ஏழைகள் பயன்பெறக்கூடாது என்ற நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு எஸ் சி ஆர் ஏ சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது மத்திய பாஜக அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொண்டு நிறுவனங்களை இயக்குவது எந்த வகையில் தேச பாதுகாப்பிற்கு எதிரானது என்று வில்சன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள எப்.சி.ஆர்.ஏ சட்ட திருத்தம் பல்வேறு கேள்விகளை எழுப்பும் என்றும் கூறியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரானது இந்த சட்ட திருத்தம் என்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் நெருங்கியாச்சு..! வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் கார்த்திக் மோகன் வேட்பு மனுத்தாக்கல்..!!

FCRA சட்ட திருத்தம் மூலம் எந்த காரணமும் இல்லாமல் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ துண்டு நிறுவனங்கள் அரசுக்கு சென்று சேரும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் உரிமம் என காரணமே இல்லாமல் அனைத்தையும் ரத்து செய்ய முடியும் என்ற விளக்கத்தையும் எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு வாய்க்கொழுப்பு.. டெல்லிக்கு காவடி தூக்கி EPS..! விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share