×
 

பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸிலயே தங்கும் நிலை உள்ளது -   108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேதனை 

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்களுக்கான ஓய்வறை மற்றும் மருந்துகள் பாதுகாக்கும் இடம் அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் பெண் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை புது நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதருகின்றனர். மேலும் புது நத்தம் சாலையில் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் வேண்டும் என்பதற்காக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

பல மாதங்களாக 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஓய்வறை இல்லாத நிலையில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ்சிலயே தங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

மேலும் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தேவைக்கான மருந்துகள் வைப்பதற்கான அறை இல்லாத நிலையில் மருந்துகளை பாதுகாக்க முடியாத சூழல் உள்ளதாகவும், இது தொடர்பாக இணை இயக்குனரிடம் கூறினால் அது பொதுப்பணித்துறை முடிவு என கூறுவதால் 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்கள் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வெறும் ரூ.1199க்கு விமானத்தில் போகலாம்.. ஹோலி பண்டிகை சலுகை வந்தாச்சு.!!

பெண் ஊழியர்களுக்கான ஓய்வறை மற்றும் மருந்து பாதுகாப்பு அறை ஆகியவற்றை ஏற்பாடு செய்து தர கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி இருளாண்டி பேசிதாவது, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஓய்வறை இல்லாத நிலையில் 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ்சிலயே தங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.  

மேலும் பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது்தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்காக மனு அளித்துள்ளோம்.

இதேபோன்று அவனியாபுரத்தில் சிறிய ஆம்புலன்ஸ் வண்டி உள்ளதால் பெரிய ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும், பாலமேடு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஊழியர்கள் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் போதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: திமுக அமைச்சர்களுடன் அதிமுக கள்ள உறவு..? எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இப்படித்தான்- கே.என்.நேரு ஒரே போடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share