×
 

#BREAKING காதலிக்க மறுத்த பெண் கொடூரக்கொலை... கத்தியால் சரமாரியாக குத்திய கொடூரன் கைது...!

தருமபுரியில் காதலிக்க மறுத்த பெண் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தருமபுரி அடுத்த தேங்காய்மரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் சின்னசாமி(31), அதேப் பகுதியை சேர்ந்த சீலா(22) என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது .தொடர்ந்து காதலிக்க மறுத்த சீலாவை  சின்னசாமி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார் .

தொடர்ந்து சின்னசாமியை நிராகரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி சீலாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வற்புறுத்திய நிலையில் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த சீலா பேசுவதை நிறுத்தி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னசாமி சில பணி முடித்து வீடு செல்வதற்காக தர்மபுரி நகர பேருந்து  தனது தோழிகளுடன் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது திடீரென பேருந்து நிலையத்திற்கு வந்த சின்னசாமி   சீலாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி ஏற்கனவே  மறைத்து வைத்திருந்த   கத்தியால் சீலாவின் கழுத்தில் மற்றும் வயிற்றுப் பகுதி முதுகு பகுதி ஆறு இடங்களில் குத்தியதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில்  துடிதுடித்த சீலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் சின்னசாமியை பிடித்து சரமாரியக தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மேலும் சீலாவை தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெங்களூரில் உள்ள நாராயண இருதாலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகர காவல் துறையினர் சின்ன சாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இளம் பெண் கொலை. கொலை செய்த நபரை போலீசார் கைது… pic.twitter.com/buZhYpFh0l

— ஜெயராமன் திமுக (@jayaraman418) July 8, 2026

இதையும் படிங்க: சூதானமா இருங்க மக்களே...!! - தூத்துக்குடியில் அதிபயங்கரம்... வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share