×
 

இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

இரவு நேரத்தில் பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருச்செந்தூர் அருகே உள்ள செட்டியாபத்து அருகேகுமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரின் மனைவி சாந்தி(31). இவர் தற்போது கணவரை விட்டு தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று இரவு மெஞ்ஞானபுரம் அருகே உள்ள செட்டியாபத்து பகுதியில் சாந்தி சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள்  சாந்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

இதில் கழுத்து, கை உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த சாந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாந்தியை அரிவாளால் வெட்டிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே இரவு நேரத்தில் பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share