×
 

மத்தவங்களுக்கு 200 எங்களுக்கு மட்டும் 100, 50 ஆ... ஓட்டு கேட்டு ஏரியா பக்கம் வா - அதிமுகவினரை ரவுண்ட் கட்டிய பெண்கள்...!

மத்தவங்களுக்கு 200 எங்களுக்கு மட்டும் 100, 50 ஆ  -- கூட்டத்திற்கே வரலை,  ஓட்டு கேட்டு ஏரியா பக்கம் வாங்க. நாக்க புடுங்கர மாறி கேள்வி கேக்கிறேன் கூட்டத்திற்கு வந்த  என பெண் ஆவேசமாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம்,  காங்கேயத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.  இதையொட்டி தொகுதி முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்டோ மற்றும் லாரிகளில் அழைத்து வரப்பபட்டனர். இதில் காங்கேயம் பகுதியில் எடப்பாடி கூட்டத்திற்கு 500 க்கும் மேற்பட்டோர் காங்கேயம் காவல் நிலையம் முன்பு கூடியிருந்தனர் .

அப்போது கூட்டத்தில் நிர்வாகிகள் பணம் கேட்ட பெண்களிடம்,  கூட்டத்திற்கு வார்டிற்கு 100  பேர் மட்டும் தான் அழைத்தோம், அவர்களுக்கு மட்டும் தான் பணம் கொடுத்து இருக்கிறார்கள். உங்களுக்கு தர வில்லை, வேண்டும் என்றால் ஆளுக்கு 100, 50 தருகிறோம் எனக்கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உங்கள் பணமும் வேண்டாம், கூட்டமும் வேண்டாம் என கூறி விட்டு , நீங்கள் அழைத்த 100 பேர் ஓட்டு மட்டும் போதுமா, எங்கள் ஓட்டு வேண்டாமா, ஓட்டு கேட்டு ஏரியாவிற்கு வாங்க, அப்ப நாக்க புடுங்கிர மாரி கேக்கிறோம், என கூறி விட்டு ஏராளமான மக்கள் திரும்பி சென்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்பே ஏராளமான பொதுமக்கள் கூட்டத்தை விட்டு   கிளம்பி சென்றதால் காசு கொடுத்து கூட்டம் சேர்த்த அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை கேட்க தடுப்பு கட்டைகள் மீது ஏறிய தொண்டர்கள், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி போன்ற அதிமுக தலைவர்களின் பேனர்களை கிழித்து. அதன் மீது ஏறி நின்றபடி அவரது பேச்சைக் கேட்டனர். 

இதையும் படிங்க: எங்க உயிர் அவ்வளவு மட்டமா போச்சா? - பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி செய்த செயலால் ஷாக்கான மக்கள்...!

காங்கேயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொள்ளும் பிரச்சாரத்திற்கு  கூட்டத்தை காண்பிக்க 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அழைத்து வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு எதுக்கு இந்த வேலை? அமித்ஷா தான் முடிவெடுப்பாரா! விளாசிய ஆ.ராசா…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share