×
 

உணவு பிரியர்களே தயாரா?! ஏற்காட்டில் இன்று சுடச்சுட சிக்கன் பிரியாணி திருவிழா.! ரூ.99 மட்டுமே!

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்காட்டில் இன்று சிக்கன் பிரியாணி திருவிழா நடக்கிறது. ரூ.99-க்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சார்பில் ஏற்காட்டில் இன்று (ஜூலை 13) ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் சிறப்பு திருவிழா நடைபெறுகிறது. மலிவு விலையில் தரமான உணவை வழங்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இன்று நடைபெறும் நிகழ்விலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், கொல்லிமலை, கன்னியாகுமரி, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், தமிழ்நாடு ஓட்டல்கள் மற்றும் அமுதம் உணவகங்கள் மூலம் பல்வேறு சைவ, அசைவ உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 5-ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு ஓட்டல்கள், அமுதம் உணவகங்கள் மற்றும் படகு இல்லங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் இந்த சிறப்பு பிரியாணி திருவிழா நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: துரோகம் பண்ண என்ன இருக்கு?! திமுக இத பண்ணலையே! திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!!

ஏற்காட்டில் உள்ள படகு இல்லம் முன்பாக மதியம் 12.30 மணி முதல் ரூ.99-க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி பார்சல் வழங்கப்படும். ஆனால், முதல் 100 பேருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, முன்னதாக வருபவர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும்.

சுற்றுலா பயணிகள் தரமான சிக்கன் பிரியாணியை மலிவு விலையில் சுவைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. ஏற்காட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! ஆ.ராசா மீது பாய்ந்தது வழக்கு! விரைவில் கைது?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share