×
 

#BREAKING: கரூர் வதந்தி... யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது... வேட்டையை தொடரும் போலீஸ்...!

கரூர் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவு குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் ஆணையத்தை அமைத்தார். அதைத்தொடர்ந்து புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்தார். அதன்படி சமூக வலைதளங்களில் கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ரெட் பிக்ஸ் நிறுவனர் பெலிக்ஸ் கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: முன்ஜாமின் மறுத்த நீதிமன்றம்... தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு? தேடும் வேட்டையில் போலீஸ்...!

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் மாரிதாசை கைது செய்தனர். கரூர் விவகாரத்தில் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்ததால் மாரிதாஸ் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தன்னை கைது செய்ய போலீசார் வந்திருப்பதாக எக்ஸ் வலைதள பக்கத்தில் மாரிதாஸ் முன்னதாக பதிவிட்டிருந்தார். மாரிதாஸ் ஏற்கெனவே அரசியல் கருத்துக்களுக்காக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவரது பேச்சு அவதூறு, சமூக நல்லிணக்கத்தைத் தடுக்கும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம்... சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி... நீதிபதி சொன்ன காரணம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share