×
 

#BREAKING: Asia Cup 2025: மண்ணை கவ்விய பாகிஸ்தான்.. மகுடம் சூடிய இந்தியா..! நாம ஜெயிச்சிட்டோம் மாறா..!!

துபாயில் இன்று நடைபெற்ற 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை 2025 டி20 தொடரின் குரூப் ஏ போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று (செப்டம்பர் 14) துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதின. உலக கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈர்த்த இந்த உச்ச போட்டியில், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார். 

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் டாஸ் நிகழ்வில் வழக்கமான கை குலுக்கல் இல்லாமல் போனது கவனத்தை ஈர்த்தது. இது, சமீபத்திய பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட அரசியல் பதற்றத்தின் விளைவாக கருதப்படுகிறது. இரு அணிகளும் தங்கள் முந்தைய போட்டிகளில் இருந்து மாற்றமின்றி களமிறங்கின. 

இதையும் படிங்க: ஆசிய கோப்பை ஹாக்கி 2025: வெற்றி வாகைசூடிய இந்திய அணி.. தென்கொரியாவை வீழ்த்தி அபாரம்..!!

பாகிஸ்தானின் பேட்டிங் இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே சவாலாக மாறியது. பாகிஸ்தான் பேட்டிங் தொடங்கிய போது, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஹர்திக் பாண்டியா முதல் ஓவரிலேயே சைம் அயூப்பை அவுட் செய்தார். ஜஸ்பிரீத் பும்ரா இரண்டாவது ஓவரில் முகமது ஹாரிஸை வீழ்த்தினார். இதில் சாஹிப்சாதா பர்ஹான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் முகமது ஹாரிஸ் 3 ரன், பக்கார் ஜமான் 17 ரன், சல்மான் ஆகா 3 ரன், ஹசன் நவாஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். சைம் அயூப், முகமது நவாஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களில் அவுட் ஆனார்.

பாகிஸ்தான் அணி சீராக விக்கெட்டுகளை இழந்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரகாசித்தார், அக்சர் படேல் 2 விக்கெட்டுகள், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட் எடுத்தனர். இறுதியில் ஷாஹீன் ஆப்ரிடியின் தாமதமான அதிரடி உதவியுடன் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், நிலைத்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். கில் 10 ரன்களிலும், அபிஷேக் சர்மா 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் திலக் வர்மா நிதானமாக விளையாடி 31 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

13 ஓவர்களில் 100/3 என்ற நிலையில் இருந்தது, திலக் வர்மா அவுட் ஆனாலும், இந்தியா வெற்றி பாதையில் இருந்தது. 128 ரன்கள் இலக்கில் 109/3 என்ற நிலையில் போட்டி உச்சத்தில் இருந்தது. இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை கடந்து 131 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், சிவம் துபே 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

இதையும் படிங்க: டீம் இந்தியாவின் டைட்டில் ஸ்பான்சராக ட்ரீம்11 தொடர விருப்பமில்லை.. புதிய ஸ்பான்சரை தேடும் BCCI..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share