கிரவுண்டில் ஹாரிஸ் ரவூப்பின் சர்ச்சை சைகை: ரசிகர்களின் 'கோலி' கோஷங்களுக்கு பதிலடி..!
கோலி..கோலி என ரசிகர்கள் கலாய்த்த நிலையில், விமானம் கீழே விழுவதுபோல் ஹாரிஸ் ரவூப் சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பந்தயம் அளவுக்கு அப்பாற்பட்டது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவூப் மேற்கொண்ட சைகை சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரசிகர்கள் 'கோலி, கோலி' என கத்தியதற்கு ரவூப் '6-0' என குறிப்பிட்டு பதிலடி கொடுத்தது போட்டியை மேலும் சூடாக்கியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: அப்பா..!! கண்கலங்கியபடி மைதானத்தில் இருந்து ஓடிய இலங்கை கிரிக்கெட் வீரர்..!! என்ன நடந்தது..?
https://twitter.com/i/status/1969817717399228843
ஆனால், போட்டியின் போது ரவூப் பந்து வீச்சில் இருந்தபோது இந்திய ரசிகர்கள் அவரை இலக்காகக் கொண்டு 'விராட் கோலி' என்று உரக்க கத்தி கோஷங்களை எழுப்பினர். இது 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் கோலி, ரவூப்பை எதிர்கொண்டு அடித்த இரண்டு சிக்ஸ்களை நினைவூட்டுவதாக இருந்தது. அந்த மெல்போர்ன் போட்டியில் கோலியின் அபாரமான 82 ரன்கள் இந்தியாவுக்கு வெற்றியைத் தந்தது.
https://twitter.com/i/status/1969846359554740343
ரவூப் அந்தக் கோஷங்களை கேட்டு ஆரம்பத்தில் தன் காதில் கை வைத்து 'இன்னும் சத்தமாக' என்று சைகை செய்தார். பின்னர், அவர் இந்திய ரசிகர்கள் கூட்டம் அமைந்திருந்த பகுதிக்கு அருகில் நின்றபோது, அவர் கையை உயர்த்தி '6-0' என விரல்களால் காட்டினார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது. அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு ‘6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?’ என்ற வகையில் ஹாரிஸ் ரவூப் சைகை செய்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர்.
இந்த சைகை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்திய ரசிகர்கள் கடும் விமர்சனத்தை பதிவிட்டனர். "கிரிக்கெட்டை அரசியலுடன் கலக்காதீர்கள்" என பலர் கருதுகின்றனர். போட்டியின் மற்றொரு சம்பவம் , ரவூப் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இரு தரப்பு ரசிகர்களும் இந்த சம்பவத்தைப் பற்றி விவாதிக்கின்றனர்.
இந்தியா தொடரில் வெற்றியைப் பதிவு செய்தாலும், இந்த சர்ச்சை போட்டியின் நினைவில் நிலைக்கும். ஹாரிஸ் ரவூப் போட்டிக்குப் பின், "என்னுடைய வேலை விளையாடுவது" என கூறி அமைதியாக இருந்தார். ஆனால், இந்த சைகை இந்திய-பாகிஸ்தான் உணர்வுகளை மீண்டும் சூடாக்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இதை 'அவசியமற்ற நாடகம்' என விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கைகுலுக்க மறுத்த இந்தியா.. கடுப்பான பாகிஸ்தான்.. கிரிக்கெட் வாரியத்திற்கு பறந்த புகார்..!!