ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி எங்கு நடக்கிறது.? பிசிசிஐ அறிவிப்பு.!
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதால் மே 8 அன்று ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் 11ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதன்படி திருத்தி அமைக்கப்பட்ட போட்டி அட்டவணையின்படி மே 17 முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கின. இதில் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள், இறுதிப் போட்டி நடைபெறும் இடங்கள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டி மற்றும் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 3ஆம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் ஜூன் 1ஆம் தேதி பிளே ஆஃப் சுற்று 2 ஆட்டம் நடைபெறும். அதற்கு முன்பாக பிளே ஆஃப் சுற்று 1 போட்டி மே 29ஆம் தேதியும், எலிமினேட்டர் போட்டி மே 30ஆம் தேதியும் முலான்பூரில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் தோல்வியை தழுவியது CSK அணி... 6 விக்கெட் வித்தியாசத்தில் RR ஆறுதல் வெற்றி!!
அகமதாபாத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி 3-வது முறையாக நடைபெற உள்ளது.ஏற்கெனவே 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளிலும் இங்கு இறுதிப் போட்டி நடைபெற்று இருந்தது. பழைய அட்டவணைப்படி இப்போட்டிகள் கொல்கத்தாவிலும், ஹைதராபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பருவமழை காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொடர் முழுவதும் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம்.. தோனி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!