×
 
☰

நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் (ODI) மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான வீரர்கள் பட்டியலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளுக்குச் சுப்மன் கில்லும், அடுத்த 2 போட்டிகளுக்கு ஷ்ரேயஸ் ஐயரும் கேப்டனாக வழிநடத்த உள்ளனர்.   

நியூசிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கே.எல். ராகுல் துணை கேப்டனாகச் செயல்படுவார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். 

தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பண்ட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் உடல்தகுதி குறித்த மருத்துவச் சான்றிதழைப் பொறுத்து அவர்கள் களமிறங்குவது உறுதி செய்யப்படும்.   

இதையும் படிங்க: ஈரானை வீழ்த்தி தங்கம்! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி அபாரம்! கடைசி வரை பரபரப்பு!

முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ். இதில் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் உடல்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   

இந்திய டெஸ்ட் அணி விவரம் சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி நட்சத்திர வீரர்களுடன், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார் போன்ற இளம் வீரர்களும் ஒருநாள் அணியில் இடம்பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share