×
 

இந்திய அணி விளையாடும் 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களா? பிசிசிஐ-க்கு வந்த புதிய தலைவலி!!

இந்திய அணி விளையாடும் 3 வகையான போட்டிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிக மோசமாக விளையாடினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் இந்திய அணியை தோல்விக்கு அழைத்து சென்றது. இதனால் எழுந்த கடும் விமர்சனங்களால் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் தாமாகவே விளையாடமல் இருந்தார். அந்த சமயத்தில் ரோஹித் சர்மாவுடன் பயிற்சியாளர் பும்ரா மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ரோஹித் சர்மா,  ஓய்வை அறிவிக்க மறுத்ததோடு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை வழிநடத்த ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு எடுத்தது. இதனால் கோபமடைந்த ரோஹித் சர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் அந்த அறிவிப்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறி இருந்தார்.

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா... அடுத்த கேப்டன் யார்?

இதனால் 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரோஹித் சர்மா கூறி இருப்பதாக கிரிக்கெட் வல்லூர்நர்கள் கூறுகின்றனர். ரோஹித் சர்மாவின் இந்த அறிவிப்பு காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான இந்திய அணிக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய தேவை பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வரும் நிலையில், டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடரவுள்ளார். இதுவரை இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் 3 வகையான போட்டிகளுக்கும் 3 கேப்டன்கள் நியமனம் செய்யப்பதே இல்லை என்றும் குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஒரு கேப்டன் என்று தான் செயல்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் தோனி மற்றும் கும்ப்ளே இருந்த போது இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டது என்றும் ஆனால் 3 கேப்டன்கள் என்பது அந்தந்த வீரர்களுக்கு இடையில் சிறிய மனக்கசப்பை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.. ரோகித்தை விமர்சித்த முன்னாள் ஆஸி. கேப்டன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share