×
 

சிஎஸ்கே vs பஞ்சாப்: சேப்பாக்கம் டிக்கெட் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் விற்பனை!

சென்னை சேப்பாக்கத்தில் ஏப். 3 ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு நாளை மறுநாள் முதல் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் 2026 சீசனின் சேப்பாக்கம் மைதான முதல் போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, தனது முதல் உள்ளூர் ஆட்டத்தில் களம் காண்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.

நாளை மறுநாள் முதல் ஆன்லைன் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை District by Zomato செயலி அல்லது இணையதளம் மற்றும் சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaisuperkings.com வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம். சேப்பாக்கம் மைதானத்தின் குறைந்தபட்ச டிக்கெட் விலை சுமார் ₹1,500 - ₹1,700 முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி டிக்கெட்டுகளின் விலை ₹15,000 வரை இருக்கலாம்.

இதையும் படிங்க: #WhistlePodu! இசைப்புயலின் இசை கச்சேரியுடன்.. நாளை CSK-வின் ரீயூனியன் விழா..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் (Sold Out). எனவே, ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கிய உடனேயே முன்பதிவு செய்யத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏப்ரல் 3-ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: IPL 2026: பென் டக்கெட் விலகல்..!! ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை..!! டெல்லி அணிக்கு ஷாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share