×
 

தொடரில் இருந்து வெளியேற்றம்; சேப்பாக்கத்தில் வைத்து சிஎஸ்கே சோலியை முடிச்ச பஞ்சாப் அணி!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததோடு தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். ஷேக் ரஷீத் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோன்று ஆயுஷ் மாத்ரே 6 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஷாம் கரன்- ஜடேஜா  கூட்டணி பவர் பிளேவில் விளையாடியது. இதில் ஜடேஜா 4 பவுண்டரிகள் அடித்து அதிரடியை தொடங்கிய நிலையில் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதனால் 12 பந்துகளில் அவர் 17 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதை தொடர்ந்து ஷாம்கரன் - பிரவீஸ் கூட்டணி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 பந்துகளில் ஷாம்கரன் அரை சதம் அடித்தார்.  அவர் 47 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடங்கும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டம் இழந்தார். இதேபோன்று பிரவா 2 பவுண்டரி, 1 சிக்சர் என 26 பந்தில் 32 ரன்கள் அடித்தார். அப்போது வந்த தோனி, 4 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 2 ரன்களிலும், அன்சூல் கம்போஜ் டக் அவுட்டாக, சாஹல் ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார்.

இதையும் படிங்க: பேட்டிங்கில் சொதப்பிய DC... 14 ரன்கள் வித்தியாசத்தில் KKR வெற்றி!!

சிஎஸ்கே அணி கடைசி கட்டத்தில் வரிசையாக விக்கெட்டுகளை பறி கொடுத்து 19.2 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.  191 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி களமிறங்கியது. இதில் பிரியன்ஷ் ஆர்யா 23 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே நிதானமாக ஆடி 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுபுறம் நேகல் வாதேரா 5 ரன்களிலும் ஷஷாங் சிங் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதுவரை அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த சுர்யன்ஷ் ஷெட்ஜ் 1 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த யோசு இங்கிலிசு - மார்கோ ஜான்சன் கூட்டணி அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றனர். யோசு இங்கிலிசு 6 ரன்களும் மார்கோ ஜான்சன் 4 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறுபுறம் இந்த தோல்வி மூலம் சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக தொடரை விட்டு வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிரடியாக ஆடிய KKR... டெல்லி அணிக்கு 205 ரன்கள் இலக்கு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share