சுஷ்மிதாவுக்கு குட் பை..! 61 வயதில் 2ம் காதலியுடன் 'லவ்கீகம்'… ஓடி ஒளிந்தாலும் உல்லாசமாய் லலித் மோடி..!
எல்லோருக்கும் ஒரு முறை அதிர்ஷ்டம் வரும். ஆம். ஆனால் எனக்கு இரண்டு முறை அதிர்ஷ்டம் கிடைத்தது. 25 வருட நட்பு காதலாக மாறியதால்...
இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் தலைவரான லலித் மோடி, வியாழக்கிழமை "மீண்டும் காதலைக் கண்டுபிடித்துவிட்டதாக" அறிவித்துள்ளது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று அவர் தனது புதிய காதலி ரிமா பௌரியை அறிமுகப்படுத்தினார்.
இன்ஸ்டாகிராமில், லலித் ரிமாவுடன் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார், அவர்களின் 25 வருட நட்பு காதலாக மாறியதை வெளிப்படுத்தினார். "எல்லோருக்கும் ஒரு முறை அதிர்ஷ்டம் வரும். ஆம். ஆனால் எனக்கு இரண்டு முறை அதிர்ஷ்டம் கிடைத்தது. 25 வருட நட்பு காதலாக மாறியதால், அது இரண்டு முறை நடந்தது. அது உங்கள் அனைவருக்கும் நடக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்" என்று 61 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
"உன்னை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்று கூறி, ரீமாவும் அந்தப் பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ளார். "என்றென்றும் என் அன்பே" என்று லலித் மோடியும் அவரது கருத்துக்கு பதிலளித்தார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: மகுடம் சூடும் அணிக்கு பரிசுத் தொகையை வெளியிட்ட ஐசிசி
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் சிறிது காலம் டேட்டிங் செய்த லலித், 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பதிவில் அவரை தனது "சிறந்த பாதி" என்று குறிப்பிட்டுள்ளார். லலித் மோடியின் இந்த "சிறந்த பாதி" என்கிற பதிவு பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் லலித் மோடி, இதுகுறித்து தனி ஒரு ட்வீட்டில் தெளிவுபடுத்தியுள்ளார். "தெளிவுக்காக... திருமணமாகவில்லை - ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்கிறேன். அதுவும் ஒரு நாள் நடக்கும்" என்று தெரிவித்து இருந்தார்.
முன்னதாக, லலித் மோடி மினல் சங்ரானியை 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 2018 ஆம் ஆண்டில், புற்றுநோய் காரணமாக நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மினல் இறந்தார். இந்த தம்பதியருக்கு அலியா, ருசிர் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
வரி ஏய்ப்பு, பணமோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் லலித் மோடி 2010 -ல் இந்தியாவை விட்டு வெளியேறினார். அப்போது முதல் அவர் லண்டனில் இருக்கிறார். 2013 ஆம் ஆண்டில், குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.
கடந்த ஆண்டு, முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி என்.ஸ்ரீனிவாசன் மீதும், அவர் உரிமையாளராக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது லலித் மோடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சமீபத்திய நேர்காணலில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட மோடி, ''ஆண்ட்ரூ பிளின்டாஃப் சிஎஸ்கே அணிக்குச் செல்வதை உறுதி செய்வதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழு இரண்டாவது சீசனுக்கான ஏலத்தின் போது "ஏல மோசடி" செய்ததாகக் கூறினார். ஸ்ரீனிவாசனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இது செய்யப்பட்டது. ஸ்ரீனிவாசன் மற்றும் சிஎஸ்கே அணியை "மறைமுக பிக்சிங்" செய்ததாகவும் லலித் மோடி குற்றம் சாட்டினார்.
"ஏலத்தில் மோசடி செய்து நான் ஃப்ளிண்டாப்பை ஸ்ரீனிவாசனுக்குக் கொடுத்தேன். ஆம், நாங்கள் அதைச் செய்தோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எல்லா அணிகளும் அதைப் பற்றி அறிந்திருந்தன. அது நடந்திருக்காஅவிட்டால் ஸ்ரீனிவாசன் ஐபிஎல்லை நடக்க விடமாட்டார். அவர் எங்கள் வாரியத்தில் ஒரு முள்ளாக இருந்தார். ஆம், ஃப்ளிண்டாப்பைத் தேர்வு செய்ய வேண்டாம் என்று நாங்கள் மற்ற அணிகள் எல்லோரிடமும் சொன்னோம். நான் அதைச் செய்தேன். ஏனென்றால் ஸ்ரீனிவாசன் 'எனக்கு ஃப்ளிண்டாஃப் வேண்டும்' என்று கூறினார்" என்று லலித் மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு: விராட் கோலிக்கு வாய்ப்பு மறுப்பு