×
 

அப்போ பாகிஸ்தான்; இப்போ வங்கதேசம்.. பிசிசிஐ அதிரடி... பின்னணி என்ன?

பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராகவும் இனி இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது. வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் இனி இந்தியா விளையாட போவதில்லை என பிசிசிஐ உறுதியாக தெரிவித்திருந்தது. இனி ஐசிசி தொடரில் கூட பாகிஸ்தானுக்கு எதிராக தாங்கள் விளையாட மாட்டோம் என்று இந்தியா உறுதியாக உள்ளது.

இதையும் படிங்க: தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.. ரோகித்தை விமர்சித்த முன்னாள் ஆஸி. கேப்டன்!!

இதன் காரணமாக தற்போது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்தியா பங்கேற்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பாகிஸ்தானை போல வங்கதேசத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், வங்கதேசத்தில் உள்ள தற்காலிக அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து வங்கதேசத்துக்கு எதிராகவும் இனி இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காது என்ற ஒரு முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக வரும் ஆக.17 முதல் 31 ஆம் தேதி வரை வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. மேலும் அதற்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களது கிரிக்கெட் அணியை வங்கதேசத்திற்கு அனுப்ப போவதில்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: இலக்கை எட்ட தடுமாறிய SRH... பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் கலக்கிய GT வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share