இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் வீரர்களுக்கு இடம்... வெளியானது இந்திய ஏ டீமின் விவரம்!!
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் ஏ டீமில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மே 30ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் இளம் வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் ஏ டீமில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்திய ஏ டீமுக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் கருண் நாயர்க்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இசான் கிஷனும் தற்போது இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதை தவிர ஆல்ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, சர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறாத இந்திய அணி.. துணைப் பயிற்சியாளரை நீக்க BCCI முடிவு!!
இதேபோன்று சிஎஸ்கே வீரர்களான அன்சூல் காம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் ஆகியிருக்கும் இந்திய ஏ அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படாத சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணைக் கேப்டன்) (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மனவ் சுதர், தனுஷ் கோடியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே ஆகியோர் இந்திய அணியின் A டீமில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரில் சிறப்பாக செயல்படுபவர்கள் இந்திய டெஸ்ட் தொடரின் சீனியர் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் நட்சத்திர வீரர் கில் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மூன்றாம் தேதி ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட உள்ளனர். அதேபோன்று சீனியர் வீரர்களான கே ஆர் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஆகியோர் இந்த இந்திய ஏ தொடரில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?