ஃபைனல்ஸில் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு பாக். வீரர் பதில்..!!
ஆசிய கோப்பையை வெல்வதற்கே இங்கு வந்துள்ளோம். அதில் கவனம் செலுத்துவோம் என்று பாகிஸ்தான் அணி வீரர் ஷாகீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 17-வது ஆசிய கோப்பை T20 போட்டியின் சூப்பர் 4 சுற்று, ஆசிய கிரிக்கெட்டின் உச்சக்கட்ட போட்டிகளை வழங்கி ரசிகர்களை மயக்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகளும் இந்த சுற்றில் மோதி, செப்டம்பர் 28-ல் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற போராடுகின்றன. டாப் இரண்டு அணிகள் இறுதிக்கு முன்னேறும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சூப்பர் 4 சுற்று கடந்த செப்டம்பர் 20ம் தேதி அன்று இலங்கை-பங்களாதேஷ் மோதலுடன் தொடங்கியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பங்களாதேஷ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது அபார தொடக்கத்தைப் பதிவு செய்தது. அடுத்து, செப்டம்பர் 21 அன்று இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: அப்பா..!! கண்கலங்கியபடி மைதானத்தில் இருந்து ஓடிய இலங்கை கிரிக்கெட் வீரர்..!! என்ன நடந்தது..?
தொடர்ந்து செப்டம்பர் 23 அன்று இலங்கை-பாகிஸ்தான் மோதலில், பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று தனது நிலைமையை மேம்படுத்தியது. அடுத்ததாக (செப்டம்பர் 24) நேற்று நடைபெற்ற இந்தியா-பங்களாதேஷ் இடையேயான போட்டியில் இந்தியா மீண்டும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது அபார சஞ்சாரத்தைத் தொடர்ந்தது. இந்தியாவின் NRR 0.689 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இந்தியா முதல் இடத்தில் நிலைத்துள்ளது. இன்று (செப்டம்பர் 25) பங்களாதேஷ்-பாகிஸ்தான் மோதல் நடைபெறுகிறது. இந்தப் போட்டி, பாகிஸ்தானின் வெற்றி அல்லது பங்களாதேஷின் அசத்தல் ஆகியவற்றைப் பொறுத்து தகுதி வாய்ப்புகளை மாற்றும். நாளை, செப்டம்பர் 26 அன்று இந்தியா-இலங்கை இடையேயான மோதல் சுற்றை முடிவடையச் செய்யும். இலங்கை, தனது NRR-ஐ மேம்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளது.
இதில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். இதில் வெற்றி காணும் அணி 4 புள்ளியுடன் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். தோற்கும் அணி வெளியேறும். இலங்கை ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.
இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறோம். எனவே இனி அவர்கள் எங்களுக்கு இணையான சவால் அளிக்கக்கூடிய அணி என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அப்ரிடி, சூர்யகுமார் தனது விருப்பப்படி எது வேண்டுமானாலும் சொல்லட்டும். இது அவரது கண்ணோட்டம். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கும் இறுதிப்போட்டியில் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளது. அப்போது என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
ஆசிய கோப்பையை வெல்வதற்கே இங்கு வந்துள்ளோம். அதில் கவனம் செலுத்துவோம். இறுதிப்போட்டியில் யாரையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். பெரிய அணிகளுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறவில்லைதான், அதை மாற்றிக் காட்டுவோம் என்று கூறினார். ரசிகர்கள், இறுதிப் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை சூப்பர் 4: மீண்டும் மோதும் இந்தியா-பாகிஸ்தான்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பு..!