மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!
பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட 2025 ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்கி நடைப்பெறவிருந்தது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருந்தன. ஆர்சிபி அணி எஞ்சி உள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
மறுபுறம் கொல்கத்தா அணியை பொறுத்தவரை 11 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் தான் எஞ்சி இருக்கிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் கூட கொல்கத்தா அணி 15 புள்ளிகள் மட்டுமே பெறும். இதனால் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பு குறைவு என கூறப்பட்டது. இதனிடையே சின்னசாமி மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!
மழை நின்ற பின் ஆட்டத்தை தொடங்கலாம் என காத்திருந்த நிலையில் மழை நின்றபாடில்லை. 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 10 மணிக்கு மேல் ஆகியும் மழை காரணமாக தொடங்கப்படாமல் இருந்தது. மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.
இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம், புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்திற்கு சென்றுள்ளது. அதே நேரத்தில், ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. கேகேஆர் அணி இதற்கு முன்னர் ஈடன் கார்டன்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே விளையாடிய நிலையில், மழை காரணமாக அந்த போட்டியும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?