ஈடன் கார்டனில் லக்னோவின் திக் திக் வெற்றி! அறிமுக வீரர் முகுல் சௌத்ரி அதிரடி!
கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது.
ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. லக்னோ அணியின் இளம் வீரர் முகுல் சௌத்ரி, தனி ஒருவனாகப் போராடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, எதிரணியைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்துவோம் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்த சீசனில் தனது முதல் வெற்றிக்காகக் காத்திருக்கும் கேகேஆர் அணிக்கு, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் அணிக்குத் திரும்பியது பெரிய பலமாக அமைந்தது. கேப்டன் அஜிங்க்யா ரகானே தலைமையில் களம் கண்ட கேகேஆர், ஒரு சவாலான ஸ்கோரை எட்டப் போராடியது.
இதையும் படிங்க: கடைசி பந்தில் திக் திக்! டெல்லி கேப்பிட்டல்ஸை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
வெற்றிக்குக் கடினமான இலக்கை நோக்கி லக்னோ அணி ஆடியபோது, 21 வயதான இளம் வீரர் முகுல் சௌத்ரி விஸ்வரூபம் எடுத்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், தனது தந்தை தலிப் குமார் சௌத்ரியின் கனவை நனவாக்கக் கடும் போராட்டங்களுக்குப் பின் கிரிக்கெட்டிற்குள் நுழைந்தவர். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 198.85 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி காட்டிய இவரை, ஐபிஎல் 2026 ஏலத்தில் லக்னோ அணி ₹2.60 கோடிக்கு வாங்கியது. கேகேஆர் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த முகுல், இக்கட்டான சூழலில் அதிரடியாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தார்.
முகமது ஷமி மற்றும் அவேஷ் கான் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் கேகேஆர் பேட்டர்கள் தடுமாறினர். சுனில் நரைன் பந்துவீச்சில் மிரட்டினாலும், லக்னோவின் லோயர் ஆர்டர் பேட்டிங்கை வீழ்த்த முடியாமல் போனது கேகேஆர் அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இதையும் படிங்க: இன்று கோலாகலமாக தொடங்குகிறது IPL திருவிழா..!! 10 அணிகளில் உள்ள வீரர்கள் யார், யார்? முழு லிஸ்ட் இதோ..!!