வெளிநாட்டு வீரர்களின் உயிருடன் விளையாடிய பாக்., கிரிக்கெட் வாரியம்... அம்பலமான கீழ்த்தரச் செயல்..!
ஒரு நாள் முன்பு இரண்டு ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததை அவர் எங்களிடமிருந்து மறைக்க முயன்றார். அதைப் பற்றி பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் போன்ற சூழ்நிலை எழுந்ததைக் கண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டியை முதலில் நிறுத்தி ரத்து செய்தது. அங்கிருந்து வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் ஐபிஎல் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானின் கீழ்த்தரமான செயல் அம்பலமாகி உள்ளது. ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், கராச்சியில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடர முடிவு செய்திருந்தது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்காக, பாகிஸ்தாஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி வெளிநாட்டு வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் ரிஷாத் ஹொசைன் அம்பலப்படுத்தி உள்ளார்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள், தாக்குதல்கள் இருந்தபோதிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக இருந்தார். அதனால்தான் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்ட பின்னரே பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைக்க அவர் முடிவு செய்தார். ஆனால், நக்வி வெளிநாட்டு வீரர்களின் கூட்டத்தை கூட்டியதாக ரிஷாத் உசேன் தெரிவித்துள்ளார். அப்போது ஒரு நாள் முன்பு நடந்த ட்ரோன் தாக்குதல் விஷயத்தை அவர் வெளிநாட்ட் வீரர்களிட்ம் இருந்து மறைத்தார். வெளிநாட்டு வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து மீதமுள்ள போட்டியை கராச்சியில் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் யாரும் அதற்கு உடன்படவில்லை. அனைவரும் துபாய் செல்வதில் பிடிவாதமாக இருந்தனர். பின்னர் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
பாகிஸ்தானை பாதுகாப்பாக விட்டு வெளியேறிய பிறகு, துபாய் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரிஷாத் கூறுகையில், "தற்போதைய நிலைமை, எங்கள் கவலைகள் குறித்து நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை அறிய ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு வீரர்களும் போட்டிக்கான ஒரே பாதுகாப்பான இடம் துபாய் என்று கூறினர். அப்போது, மீதமுள்ள போட்டிகளை கராச்சியில் நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எங்களை சமாதானப்படுத்த முயன்றார். அந்த நேரத்தில், ஒரு நாள் முன்பு இரண்டு ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததை அவர் எங்களிடமிருந்து மறைக்க முயன்றார். அதைப் பற்றி பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது. பின்னர் நாங்கள் அனைவரும் துபாய்க்கு மாற முடிவு செய்தோம்.
இதையும் படிங்க: தணிந்தது இந்தியா - பாக். போர் பதற்றம்... 2025 ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும்? வெளியானது தகவல்!!
வெளிநாட்டு வீரர்கள் விமானத்தில் ஏறிய 20 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையம் ஏவுகணையால் தாக்கப்பட்டது'' என ரிஷாத் தெரிவித்துள்ளார். இந்த வகையில் அவர் பாகிஸ்தான் இராணுவத்தின் மற்றொரு கீழ்த்தரமான செயலை அம்பலப்படுத்தி உள்ளார். ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும்போது பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடவில்லை என்றும், சிவில் விமான நிறுவனங்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய அரசு சமீபத்தில் வெளிப்படுத்தியது. இந்த வகையில், வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் ஐபிஎல் ஸ்டார்ட் பண்ணலனா; நாங்க வரமாட்டோம்.. சொந்த ஊர்களுக்கு திரும்பும் வீரர்கள்!!