கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல!! இந்தியர்களுக்கு அது வாழ்க்கை!! நெகிழ்ந்து பேசிய மோடி!
'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது,' என்று உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நவி மும்பையில் நவம்பர் 2 அன்று நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக சாம்பியன் ஆனது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அணியினர் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தனர்.
உலகக்கோப்பையை பிரதமரிடம் கொடுத்து, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சந்திப்பு, வெறும் வாழ்த்து சொல்வதோடு நின்றுவிடவில்லை. வெற்றியின் ரகசியம், ஹனுமான் டாட்டூ, பிரதமரின் முகப்பொலிவு என இலகுவான கலந்துரையாடலாக மாறியது. "இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு இல்லை, அது மக்களின் வாழ்க்கை" என்று பிரதமர் மோடி உருக்கமாகப் பேசினார்.
போட்டியின் ஹைலைட், இந்தியாவின் 259/5 ரன்களுக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா 207 ரன்களில் சுருண்டது. தீப்தி சர்மா தொடர் நாயகி விருது வென்றார். அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், பிரதமரிடம், "2017-ல் உங்களை சந்தித்தோம், ஆனால் கோப்பை வெல்லவில்லை. இப்போது உலக சாம்பியன்கள். உங்களை இன்னும் பலமுறை இதேபோல் சந்திக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று உற்சாகமாகக் கூறினார்.
இதையும் படிங்க: RCB for Sale..!! அணி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..!! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி..!!
பிரதமர் மோடி, "நீங்கள் பெரிய காரியத்தைச் செய்துவிட்டீர்கள். கிரிக்கெட் வெற்றி என்றால் நாடே கொண்டாடும், தோல்வி என்றால் அதிர்ச்சி அடையும். அது இந்தியாவின் உணர்வு" என்று பாராட்டினார்.
சந்திப்பில் சுவாரசியமான தருணங்கள் நிறைந்தன. தீப்தி சர்மாவின் கையில் இருந்த ஹனுமான் டாட்டூவைப் பார்த்த பிரதமர், "இது உங்களுக்கு எப்படி உதவியது?" என்று கேட்டார். தீப்தி, "என்னைவிட ஹனுமான் மீது நம்பிக்கை அதிகம். அது என் விளையாட்டை மேம்படுத்தியது" என்று சிரித்தபடி பதிலளித்தார். அப்போது, ஆல் ரவுண்டர் ஹர்லின் தியோல், "பிரதமரின் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது, ரகசியம் என்ன?" என்று கேட்டார்.
பிரதமர் சிரித்து, "நான் அதைப் பற்றி யோசிப்பதில்லை" என்றார். உடனே ஸ்நேகா ரானா, "நாட்டு மக்களின் அன்புதான் காரணம்" என்று குறுக்கிட்டார். பிரதமர், "நிச்சயம்! என் வலிமை மக்கள்தான். பல ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், ஆசிர்வாதங்கள் தொடர்கின்றன" என்று உருக்கமாகப் பதிலளித்தார். அரங்கம் சிரிப்பொலியால் நிரம்பியது.
இந்த சந்திப்பு, வெற்றியின் கொண்டாட்டத்தை இன்னும் இனிமையாக்கியது. அணியினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கின்றனர். இந்த வெற்றி, மகளிர் கிரிக்கெட்டுக்கு புதிய உயரத்தை அளித்துள்ளது. பிரதமரின் வார்த்தைகள், இந்தியாவின் கிரிக்கெட் காதலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. வீராங்கனைகளின் உழைப்பு, நாட்டின் பெருமையை உலகுக்கு காட்டியுள்ளது.
இதையும் படிங்க: Definitely not!! IPL 2026!! CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்! பட்டையை கிளம்புறோம்!