×
 

ஐ.பி.எல்: RR அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி வேண்டாம்.. டிராவிட் திடீர் விலகல்..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், 2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய அணியில் பயிற்சியாளர் பொறுப்பில் இடம் பெறுவார் என்று தகவல்கள் தற்போது பரவி வருகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் டிராவிட்டை நியமிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட், 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வீரராகவும், கேப்டனாகவும் பணியாற்றினார். 2014இல் ஓய்வு பெற்ற பின்னர், ஆலோசகராகவும், பின்னர் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். 2024இல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு, மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக இணைந்தார். அவரது அனுபவமும், இளம் வீரர்களை வழிநடத்தும் திறனும் அணிக்கு பெரும் பலமாக இருந்தது.

இதையும் படிங்க: மகளிர் உலகக்கோப்பை பெங்களூருவில் நடக்காதாம்.. நவி மும்பைக்கு மாற்ற இதுதான் காரணம்..!!

இருப்பினும், 2025 ஐபிஎல் தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. டிராவிட் விலகுவதற்கான காரணம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தெளிவான தகவல் வெளியிடவில்லை. ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) மீண்டும் இணைந்து, இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்காகப் பணியாற்ற விரும்புவதாக ஊகங்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம், “டிராவிட் அணிக்கு அளித்த பங்களிப்பு அளப்பரியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளது. டிராவிட் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமைப் பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளராக 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தவர். அவரது விலகல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எதிர்கால திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ள நிலையில், விரைவில் சஞ்சு சாம்சனும் வெளியேறுவார் என்று கணிப்புகள் வெளியாகி வருகின்றன. கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதனை அஸ்வின் உடனான நேர்காணலின் போது சஞ்சு சாம்சனும் மறைமுகமாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதையும் படிங்க: 'இம்பேக்ட் பிளேயர்' விருது வென்ற வாஷிங்டன் சுந்தர்.. பாராட்டிய ஜடேஜா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share