×
 

சி.எஸ்.கே பந்துகளை தெறிக்கவிட்ட ரொமாரியோ ஷெப்பர்ட்... இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி!!

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 214 ரன்களை பெங்களூர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியும்  ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஜாக்கப் போத்தேல் மற்றும் விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.  ஜோக்கப் பொத்தல் 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் விராட் கோலி 33 பந்துகளின் 62 ரன்கள் சேர்த்து அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த டேவுதட் படிக்கல் 17 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 7 ரன்களிலும் ரஜத் பட்டிதார் 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆர் சி பி அணி 200 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது. 180 ரன்களை எட்டவே ஆர் சி பி அணி தடுமாறி வந்த நிலையில் ரோமாரியோ ஷெஃபெர்ட் – டிம் டேவிட் கூட்டணி களமிறங்கியது.

இதையும் படிங்க: CSK-வை கிண்டலடிக்கும் வகையில் ஜெயில் டீசர்ட்... பெங்களூர் மைதானத்தில் RCB ரசிகர்கள் அடாவடி!!

19 ஆவது ஓவரரை கலீல் அகமத் ஆட்டத்தின் வீச ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெஃபெர்ட் சிக்ஸ், பவுண்ட்ரி என பந்துகளை விளாசினார். இந்த ஓவரில் 4 சிக்ஸர்களும்,2 பவுண்டரிகளும் சென்றது. இதன் மூலம் ஒரே ஓவரில் ஷெஃபெர்ட் 33 ரன்கள் குவித்தார். இதனால் ஆட்டம் தலைக்கீழாக மாறியது. இதேபோன்று பதிராணா கடைசி ஓவர் வீசினார். அதிலும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை ஆர்சிபி வீரர்கள் அடித்தனர்.

இந்த ஓவரிலும் 24 ரன்கள் சென்றது. இதன் மூலம் கடைசி இரண்டு ஓவரில் 57 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணி ஆட்டத்தையே தலைகீழ் மாற்றியது. டிம் டேவிட் 2 ரன்கள் சேர்த்திருந்தார். ரெமோரியோ செபர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் விளாசியுள்ளார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு சிஎஸ்கே அணி ஒருமுறை கூட 180 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக சேஸ் செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலக்கை எட்ட தடுமாறிய SRH... பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் கலக்கிய GT வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share