×
 

இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியுடன் சீசனை முடித்துக்கொள்ளவுள்ளது. இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா, நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றோம்.

ஆடுகளம் ஒரு நல்ல விக்கெட்டாக தெரிகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் சேஸ் செய்ய விரும்புகிறோம். ரஜத் பட்டிதார் எங்கள் அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்குவார். இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிக்க நாங்கள் முயற்சி செய்கின்றோம். டிம் டேவிட் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.

இதையும் படிங்க: IPL 2025: மும்பையை பஞ்சராக்கிய பஞ்சாப்.. புள்ளிப் பட்டியலில் தரமான சிறப்பான சம்பவம்!!

அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் களமிறங்குகிறார். இதேபோன்று துசாராவுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். லுங்கி நிகிடி அணியில் இல்லை என்று ஜித்தேஷ் சர்மா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ எந்த ஒரு கவலையும் படவில்லை.

கடந்த போட்டியில் எங்கள் அணி எவ்வளவு திறமை வாய்ந்த வீரர்கள் உடைய அணி என்பதை காட்டினோம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலுமே கற்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது. கடைசி பந்து வீசும் வரை ஒவ்வொரு வீரர்களும் 100 சதவீத பங்களிப்பையும் கொடுப்போம். எங்கள் அணியில் விக்னேஷ் ரதி திரும்பி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share