சென்னை அணியுடன் கைகோர்த்த சஞ்சு சாம்சன்..!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசனுக்கு முன்னதாக ஒரு அதிர்ச்சி தரும் டிரேட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணைந்துள்ளார். இந்த டிரேட் மூலம், சஞ்சு சாம்சன் தனது தற்போதைய சம்பளமான ₹18 கோடியுடன் CSK-க்கு மாறுகிறார். அதே சமயம், சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (₹14 கோடி) மற்றும் சாம் கர்ரன் (₹2.4 கோடி) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்கின்றனர். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு IPL நிர்வாகத்தால் இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
சஞ்சு சாம்சன், கேரளாவைச் சேர்ந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், கடந்த 8 ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய உறுப்பினராக இருந்தார். அவர் அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்று, பல சீசன்களில் அணியை வழிநடத்தினார். IPL-இல் 170 போட்டிகளில் விளையாடி 4,419 ரன்கள் குவித்துள்ள சஞ்சு, தனது அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். இந்த டிரேட் மூலம், அவர் சென்னை அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. CSK அணியின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் வரலாம் எனவும் விவாதங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: "அண்ணே வராரு வழிவிடு"..!! 2026 IPL-ல் களமிறங்குகிறார் 'தல' தோனி..!! ரசிகர்கள் ஆரவாரம்..!!
மறுபுறம், ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்புகிறார். 2008-இல் ராஜஸ்தான் அணியுடன் தனது IPL பயணத்தைத் தொடங்கிய ஜடேஜா, கடந்த 16 ஆண்டுகளாக CSK-இன் முதுகெலும்பாக இருந்தார். அவர் CSK-க்கு 5 IPL கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்த டிரேட், CSK அணியின் முக்கிய உறுப்பினர்களை மாற்றும் முடிவாகக் கருதப்படுகிறது. சாம் கர்ரன், ஆல்ரவுண்டராக ராஜஸ்தான் அணிக்கு பலம் சேர்ப்பார்.
இந்த டிரேட் IPL வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. CSK அணி தனது அணி அமைப்பை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அதேநேரம் ராஜஸ்தான் அணி அனுபவமிக்க வீரர்களைப் பெற்றுள்ளது. IPL 2026 ஏலம் டிசம்பரில் நடைபெற உள்ள நிலையில், இந்த மாற்றம் அணிகளின் உத்திகளை பாதிக்கும். ரசிகர்கள் இந்த மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: LA Olympics 2028: ஜூலை 12-29 வரை கிரிக்கெட் போட்டிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!