ஐ.பி.எல் போட்டியில் ரூ.60 கோடிக்கு ஏலம் போன இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி..? ஷாக்கை குறைங்க..!
நீங்கள் தொடர்ந்து கவலைப்படலாம் அல்லது எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து எல்லாவற்றையும் பற்றி ஜெபிக்கத் தேர்வு செய்யலாம்
''ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனை தனஸ்ரீ வர்மா'' எனக் கூறி தனஸ்ரீ வர்மா ரூ.60 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி, மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி, வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடி கோடிடட்டப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பரபரப்பாக பகிர்ந்து வருகின்றனர்.
அட, இது என்ன புதுக்கதை... ஐபிஎல் போட்டியில் பெண் விளையாட்டு வீரரா..? தனஸ்ரீ வர்மா என்பவர் கிரிக்கெட் வீரரா..? அதுவும் ஐபிஎல் ஏலத்தில் ரூ.60 கோடிக்கு எடுக்கப்பட்டாரா? என குழப்பமும், சந்ததேகமும் ஏற்படுகிறதா…? நம்புங்கள் இது வதந்தியே...
உண்மை என்ன தெரியுமா..? விஷயம் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி, நடன இயக்குனரும், சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான தனஸ்ரீ வர்மா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தனஸ்ரீயின் வழக்கறிஞர், இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.பிரிவினை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். இந்த ஜோடி குறித்த யூகங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனஸ்ரீ ₹60 கோடி ஜீவனாம்சம் கேட்டதாக பலரும் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், தனஸ்ரீயின் குடும்பத்தினர் இதனை நிராகரித்து, இந்த ஆதாரமற்ற தகவலால் அவர்கள் 'பெரும் கோபத்தில்' இருப்பதாகக் கூறினர்.
இதையும் படிங்க: சவுரவ் கங்குலி கார் விபத்து… முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுக்கு என்னாச்சு..?
சமூக வலைதளத்தில் கூறப்படும் தகவல்களை மேற்கோள் காட்டி, தனஸ்ரீயின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஜீவனாம்சம் பெற 60 கோடி ரூபாய் கேட்டதாக கூறும் வதந்திகளை முற்றிலுமாக நிராகரித்து, 'தவறான தகவல்களைப் பரப்புவதற்கு' எதிராக எச்சரித்துள்ளார்.
“ஜீவனாம்சம் தொகை குறித்து பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களால் நாங்கள் மிகவும் கோபமடைந்துள்ளோம். நான் முழுவதும் தெளிவாகச் சொல்கிறேன். அவர்கள் கூறுவது போல் அத்தகைய தொகை எதுவும் இதுவரை கேட்கப்படவில்லை, கோரப்படவில்லை... வழங்கப்படவில்லை. இந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. தனஸ்ரீ வர்மாவை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரையும் தேவையற்ற ஊகங்களுக்குள் இழுத்து, இதுபோன்ற சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவது மிகவும் பொறுப்பற்றது.
இது போன்ற பொறுப்பற்ற செய்திகளைப் பரப்புவது தீங்கு விளைவிக்கும். மேலும் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு முன்பு ஊடகங்கள் நிதானத்தையும், உண்மைச் சரிபார்ப்பையும் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரின் தனியுரிமையையும் மதிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில தகவல்கள் விவாகரத்து ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறின. ஆனால் தனஸ்ரீயின் வழக்கறிஞர்கள் இந்தத் தல்களை மறுத்தனர். இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினர். தனஸ்ரீயின் வழக்கறிஞர் அதிதி மோகன், விவாகரத்து நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த விஷயம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க செய்தி வெளியிடுவதற்கு முன்பு ஊடகங்கள் உண்மைச் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"நடவடிக்கைகள் குறித்து எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. இந்த விஷயம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு முன் உண்மைகளை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் தவறான தகவல்கள் நிறைய பரப்பப்படுகின்றன" என்று தனஸ்ரீயின் வழக்கறிஞர் அதிதி மோகன் தெரிவித்துள்ளார்.
இதற்கெல்லாம் மத்தியில், தனஸ்ரீ மற்றும் சாஹல் இருவரும் தங்கள் சமூக ஊடகத்தில் ரகசிய தகவலை வெளியிட்டனர். தனஸ்ரீ இன்ஸ்டாகிராமில், "மன அழுத்தத்திலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டது வரை" என்ற மேற்கோளுடன், ''கடவுள் நம் கவலைகளையும், சோதனைகளையும் எப்படி ஆசீர்வாதங்களாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியமாக இல்லையா? இன்று நீங்கள் எதையாவது பற்றி மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து கவலைப்படலாம் அல்லது எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து எல்லாவற்றையும் பற்றி ஜெபிக்கத் தேர்வு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சாஹல் தனது சமூக வலைதளத்தில், "கடவுள் என்னை எண்ண முடியாத அளவுக்கு அதிகமான முறை பாதுகாத்துள்ளார். எனவே, எனக்குத் தெரியாத அளவுக்கு நான் மீட்கப்பட்ட நேரங்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. கடவுளே, எனக்குத் தெரியாதபோதும் எப்போதும் அங்கே இருப்பதற்கு நன்றி. ஆமென்."'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: எளிய இலக்கை போராடி சேஸ் செய்த இந்திய அணி காரணம் என்ன?