×
 

என்ன சோனமுத்தா போச்சா..!! ஹாட்ஸ்பாட் பயன்படுத்துவோருக்கு ஷாக்..!! செக் வெச்ச Airtel..!!

சமீபகாலமாக இந்த “அன்லிமிடெட்” சேவை உண்மையில் வரம்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

செல்போன் ரீசார்ஜ் மூலம் இலவச 5ஜி டேட்டா வழங்கும் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்களின் போக்குக்கு மாறாக, ஏர்டெல் நிறுவனத்தின் விதிமுறைகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பல வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் 5ஜி டேட்டாவைப் பகிர முடியவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். இது பிராட்பேண்ட் இணைப்புக்கு மாற்றாக மொபைல் டேட்டாவை நம்பியிருந்த பலருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏர்டெல் தனது திட்டங்களை “அன்லிமிடெட் 5ஜி டேட்டா” என்று விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் பலர் வீட்டு இணைய சேவைக்கு தனியாக செலவு செய்யாமல், செல்போன் ரீசார்ஜை வைத்தே உயர் வேக இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், சமீபகாலமாக இந்த “அன்லிமிடெட்” சேவை உண்மையில் வரம்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளின்படி, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பிற சாதனங்களுடன் பகிர முடியாது. இந்த உண்மையை டெக் ஆர்வலர் உத்சவ் டெக்கி தனது எக்ஸ் (ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் மூலம் பலரும் அறிந்துகொண்டனர். மேலும், சில திட்டங்களில் அதிகபட்சம் 300 ஜிபி வரை மட்டுமே 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையும் உள்ளது. இந்த வரம்பைத் தாண்டினால், அது வணிக ரீதியான பயன்பாடாகக் கருதப்பட்டு சேவை கட்டுப்படுத்தப்படலாம்.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..?? ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் 15% உயர்வு..??

ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதில் அன்லிமிடெட் 4ஜி/5ஜி டேட்டா என்று கூறப்பட்டாலும், 30 நாட்களுக்குள் 300 ஜிபி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தினால் வணிகப் பயன்பாடாகப் பார்க்கப்படும் என ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. இது அதிக டேட்டா பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் வீட்டில் பிராட்பேண்ட் இல்லாமல் ஹாட்ஸ்பாட்டை நம்பி வேலை செய்பவர்களை கடுமையாகப் பாதித்துள்ளது.

மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் கவரேஜ் உள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். 5ஜி கவரேஜ் இல்லாத இடங்களில் வழக்கமான டேட்டா வரம்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வரம்பு முடிந்தால் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நெட்டிசன்கள் இந்த விதிமுறைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “அன்லிமிடெட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றக் கூடாது” எனக் கேள்வி எழுப்புகின்றனர். ஜியோவுடன் ஒப்பிடும் போது ஏர்டெல் அதிக கட்டணம் வசூலிப்பதுடன் கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுவரை ஏர்டெல் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

இந்த சர்ச்சை டெலிகாம் துறையில் வாடிக்கையாளர் உரிமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. பயனர்கள் தங்கள் திட்ட விதிமுறைகளை கவனமாகப் படித்து ரீசார்ஜ் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..?? ஏர்டெல், ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் 15% உயர்வு..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share